தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது

No description available.

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலுக்கு அருகே உள்ள குருங்குடி கிராமத்தில், சின்னதுரை என்பவரின் மனைவி காந்திமதிக்கு சொந்தமான வானவெடி மற்றும் நாட்டு  பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

இன்று (4ம் திகதி), 10க்கும் அதிகமான பெண்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 11 மணியளவில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் காந்திமதி (57), ராசாத்தி (50),  லதா (42), மலர்கொடி (65), சித்ரா (45) உள்ளிட்ட 5 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

No description available.

மேலும், ரத்னாம்பாள் (60), தேன்மொழி (35), அனிதா, ருக்குமணி (38) ஆகிய 4 பேர் படுகாயமடைந்து, கவலைக்கிடமான நிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த பெண்களில் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No description available.

கடலூர் மாவட்ட எஸ்.பி அபிநவ், டி.எஸ்.பி ஶ்ரீதரன், சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No description available.