ஜேர்மனியை சேர்ந்த நபர்  ஒருவர்  தினமும் தனது சொந்த சிறுநீரை பருகுவதை வழமையாக கொண்டுள்ளார். 

ஜேர்மனி, ஹாம்பர்க்கைச் சேர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளரும் மாணவருமான 26 வயதான ஜான் ஷேன்மேன் என்பவரே இவ்வாறு தினமும் மூன்று முதல் ஏழு கோப்பை சிறுநீரை பருகுகின்றார்.

German man Jan Schünemann, 26, from Hamburg, revealed he drinks seven pints of his own urine every day and claims to ingest some of it through his eyes, nose and ears

அத்துடன் அதை அவரது கண்கள், மூக்கு மற்றும் காதுகளிலும் ஊற்றிகொள்கின்றார்.

சிறுநீரை பருகுவதானது பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதுடன், மனச்சோர்வைச் சமாளிக்க உதவுவதாகவும் தாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒவ்வொரு இரவிலும் தமக்கு நான்கு முதல் ஏழு மணி நேரம் தூக்கம் மட்டுமே தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, தாம் ஒருபோதும் நோய்வாய்ப்படவில்லை எனவும் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.