போதைப்பொருள், தொலைபேசிகளுடன் இரு சகோதரிகள் கைது

Published By: Digital Desk 4

04 Sep, 2020 | 12:29 PM
image

(செய்திப்பிரிவு)

4 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் பாணந்துறை - நிவிடாவ பகுதியிலுள்ள வீடான்றில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்கேநபர்களிடமிருந்து 15 கிராம் அளவிலான போதைப்பொருள், கைத்தொலைபேசிகள் 4 மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

முகத்துவாரம் - முரவத்த பகுதியைச் சேர்ந்த  சந்தேகத்திற்கிடமான பெண்கள் இருவர் பாணந்துறை - நிவிடாவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு வந்து அங்கிருந்து ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தேசபந்து தென்னக்கோனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பாணந்துறை - தெற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம். எஸ். குமாரசேன தெரிவித்தார்.

இவ்வாறு முகத்துவாரம் - முரவத்த பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 55 வயதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்களான குறித்த சகோதரிகளில் ஒருவரின் கணவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவரெனவும் அவர் வழங்குகின்ற போதைப்பொருட்களை குறித்த சகோதரிகள் விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36
news-image

வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு...

2025-03-24 13:22:28
news-image

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட...

2025-03-24 13:09:09
news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-24 12:39:24
news-image

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

2025-03-24 12:32:49