கவனிப்பாரற்றிருந்த வீதி இராணுவத்தினால் புனரமைப்பு .

Published By: Digital Desk 4

04 Sep, 2020 | 11:48 AM
image

மாங்குளம் முல்லைத்தீவு வீதியையும், நெடுங்கேணி தண்டுவான் ஊடான முல்லைத்தீவு வீதியையும் இணைக்கின்ற சுமார் 1.3 கி.மீற்றர் தூரமுள்ளது காட்டாவிநாயகர் ஆலய வீதியாகும். பல தசாப்த காலமாக தாரிடப்பட்ட முல்லைத்தீவு வவுனியாவுக்கான பஸ் போக்குவரத்துக்கள் நடைபெற்ற நடைபெறுகின்ற முக்கிய வீதி மட்டுமன்றி பல நூற்று கணக்கான மக்கள் அன்றாடப் பயன்பாட்டுக்குரியதுமாகும்.

ஆனால் இன்று மக்களது பயன்பாட்டுக்குரியதாக அன்றி குன்றும் குழியுமாகக் காட்சி தருகின்றது. தாரிடப்பட்டிருந்த இவ்வீதி கிரவல் வீதியாக மாறும் அபாயம் காணப்படுகின்றது. இக்கிராமத்து மாணவர்கள் மூன்று பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக செல்கின்றனர். 

அவர்கள் பயன்படுத்தும் முக்கிய வீதி இதுவாகும். இப்பிரதேச விவசாயிகளும், அயல்கிராம மக்களும் தமது வயல், தோட்ட நிலங்களுக்குச் செல்வதற்காகவும், இவ்வீதியினை பயன்படுத்துவது வழக்கமாகும்.

வருடாந்தம் வைகாசி மாதம் மேற்படி வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வரலாற்று பெருமைகளையும், கலாச்சார பாரம்பரியங்களையும் கொண்ட காட்டாவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல்விழா நடைபெறுவதும் இதற்காகப் பெருந்தொகையான பக்தர்கள் ஏனைய பிரதேசங்களில் இருந்து வருகை தருவதும் வழமையாகும். 

ஆயினும் யுத்தம் முடிவடைந்து 12ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கவனிப்பாரற்று கிடக்கின்றது.  வடக்கு மாகாண சபைக்குரியதும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ளதுமான இவ் வீதி அகல காடுகள் கூட வெட்டப்படாத நிலையில் பற்றை மூடி பாதை சுருங்கி நடைபாதையாகும் நிலை ஏற்படுமோ என்று அச்சப்பட வேண்டுயுள்ளது.

மழை காலங்களில் பாதை வழியாக நீர் பாய்ந்தோடுவதால் பொது மக்கள் இவ் வீதியால் போய் வருவதற்கு மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். 

எனவே பொது மக்களின் நலன்கருதி இவ்வீதியைத்திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து உதவுமாறு கோரியிருந்தும் யாருமே இவ்வீதியை கவனத்தில் எடுக்காததன் காரணத்தினால் இராணுவம் பொதுமக்களின் உதவியுடன் குறித்த வீதியை துப்பரவு செய்து வருகின்றமை மக்கள் மத்தியில் இராணுவத்தின் மேல் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02
news-image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...

2023-12-11 16:03:35
news-image

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...

2023-12-11 15:20:09
news-image

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2023-12-11 15:19:19
news-image

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால்...

2023-12-11 15:46:41