யாழ். நல்லூர் குறுக்குத் தெருவில் புதிதாக அமைத்துக்கொண்டிருந்த வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்தச் சம்பவம் நல்லூர் குறுக்குத் தெருவில்  நேற்று முந்தினம் இரவு11 மணியளவில் இடம்பெற்றது.

காலியைச் சேர்ந்த 38 வயதான தொழிலாளி ஒருவரே இவ்வாறு தவறி விழுந்து உயிரிழந்தார்.

புதிதாக அமைத்து வரும் குறித்த வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் குறித்த உயிரிழந்த நபர் நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார்.

எனினும் அவர் தவறி நிலத்தில் வீழ்ந்ததையடுத்து. அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

இறப்பு விசாரணை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் நேற்றிரவு இடம்பெற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.