வெளிநாடுகளில் கொரோனாவை தொடர்ந்து விதிக்கப்ட்ட பயணக்கட்டுப்பாட்டில் சிக்கித்தவித்த மேலும் 169 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.

அதேவேளை கட்டார் , தோஹாவில் இருந்து 96 பேரும் , இந்தியாவின் சென்னையில் இருந்து 48 பேரும் , ஜப்பானின் நரிட்டாவைச் சேர்ந்த 17  பேர் உள்பட துபாய் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து 8 பேரும் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.

அத்தோடு நேற்று இரவு நாட்டிற்கு நேபாளம் மற்றும் இஸ்ரேலில் இருந்து 269 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

இந்நிலையில் நாட்டிற்கு மற்றுமொரு குழு இத்தாலியில் இருந்து இன்று பிற்பகல் வருகை தரவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.