கொவிட் -19 தொற்றுநோயை அடுத்து, தெற்காசிய பிராந்தியத்தில் காணப்பட்ட போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வு நடவடிக்கைகளை தடுக்க  இலங்கை விமானப்படை தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துள்ளது.

விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுமங்கலா டயஸின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படி, பகல்நேர மற்றும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளை விமானப்படை அதிகரித்துள்ளது.