சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட6 கோடி பெறுமதியான மஞ்சள் மீட்பு

Published By: Digital Desk 4

03 Sep, 2020 | 07:43 PM
image

(செ.தேன்மொழி)

இந்தியாவிலிருந்து சட்டவிரோதாமாக எடுத்துவரப்பட்ட ஆறு கோடி பெறுமதியான 2230 கிலோ கிராம் மஞ்சள் தொகை பேருவளை கடற்கரையோர பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இன்று  வியாழக்கிழமை குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டதாக பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்போது பேருவளை கடற்கரையோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றிலிருந்து 90 மஞ்சள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றிலிருந்து 1070 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளும் , 1160 கிலோ கிராம் மஞ்சள் தூலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் குறித்த படகின் கவலாளராக செயற்பட்டு வந்துள்ளதுடன் , இவர் முச்சக்கர வண்டியில் மஞ்சளை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை கடந்த மாதம் 11 ஆம் திகதி கடலுக்குச் சென்றுள்ள குறித்த படகு நேற்று புதன்கிழமையே கரைக்கு வந்துள்ளாகவும் , அதன் போது குறித்த படகில் மீன் பிடிக்கச் சென்று 5 பேர் வந்ததாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பயாகலை மற்றும் பேருவலை பகுதிகளைச் சேர்ந்தவர்களே படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளதுடன், அவர்கள் தற்போது அந்த பிரதேசங்களை விட்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலீடு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும்...

2024-12-13 02:13:40
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-13 01:02:13
news-image

'கோட்டாபய - பகுதி 2'ஆக மாறிவிட்டாரா...

2024-12-12 17:28:10
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள...

2024-12-12 21:13:18
news-image

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய...

2024-12-12 17:20:39
news-image

சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி...

2024-12-12 21:12:41
news-image

சபாநாயகரின் “கலாநிதி” பட்டம் தொடர்பான சர்ச்சை...

2024-12-12 17:06:16
news-image

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு...

2024-12-12 21:15:23
news-image

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை :...

2024-12-12 17:04:17
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-12 19:27:14
news-image

மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் உதாரணமாக அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டம்...

2024-12-12 19:23:22
news-image

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு...

2024-12-12 18:11:27