(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் கிராமியக் கைத்தொழில்களை மேம்படுத்துவதற்காக புதியதொரு அபிவிருத்தி செயற்திட்டத்தினை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது.

கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

அந்தந்தப் பிரதேசங்களின் கைத்தொழில் சேவை ஆணைக்குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இரத்மலானை, களுத்துறை, மில்லாவ, நாலந்த, மாகந்துர, ஊவா பரணகம மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கைத்தொழில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த செயற்திட்டத்திற்காக 9 முதலீட்டாளர்களிடம் இருந்து 35 வருடகாலத்திற்கு வரி அடிப்படையில் காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.