இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Published By: R. Kalaichelvan

03 Sep, 2020 | 06:57 PM
image

நாரம்மல மற்றும் கண்டி பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாரம்மல

நாரம்மல - குளியாப்பிட்டிய வீதி, பேரகஸ்வெல்ல பகுதியில் புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாரம்மல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த அரச பஸ்ஸொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சென்ற நபரும் பெண்னொருவரும் குருணாகல்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

போகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 62 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கண்டி

கண்டி, ஹந்தான தபோதாராம மாவத்தையில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹிருஸ்ஸகல நோக்கி சென்ற பெக்கோ இயந்திரமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்றுள்ளது. இதன்போது பெக்கோ இயந்திரம் வீதியை விட்டு விலகி 15 மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாபான - குன்னேபான பகுதியைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் அதில் வந்த இன்னொரு நபரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது...

2026-07-10 19:26:46
news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல்...

2026-07-10 19:13:12
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12
news-image

களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும்...

2026-07-10 16:52:31
news-image

சிறைச்சாலையில் மோதல் : அமைச்சரின் திட்டமிடல்...

2026-07-10 16:51:57
news-image

நாமல் ராஜபக்ஷ ‘ஏ – டீம்...

2026-07-10 16:51:18
news-image

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரித்து பேராதனை வைத்தியர்கள்...

2026-07-10 16:39:41
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைக்கு நீதியும் பொறுப்புக்கூறலும்...

2026-07-10 16:29:24