காணி உறுதிப்பத்திரங்கள் தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய உத்தரவு

Published By: J.G.Stephan

03 Sep, 2020 | 05:12 PM
image

(எம்.மனோசித்ரா)
காணி உறுதிப்பத்திரம் இன்மையால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாட்டுக்கும் பொருளாதார கொள்கைக்கும் பொருத்தமான வகையில் காணி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

 

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச வியாபார காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும், பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் உறுதிப்பத்திரம் இல்லாமையினால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாட்டுக்கும் பொருளாதார கொள்கைக்கும் பொருத்தமான வகையில்  காணி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும். மக்கள் பயன்படுத்தி வருகின்ற சிக்கலற்ற காணிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

காணி உறுதிப்பத்திரம் இல்லாமையினால் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அபிவிருத்தியும் பாரிய பின்னடைவைக் கண்டுள்ளது. விவசாய பொருளாதார பொறிமுறை ஒன்றை கட்டியெழுப்பும்போது காணி பயன்பாட்டு கொள்கை மிக முக்கியமாகும். குத்தகைக்கு விடப்பட்டுள்ள காணிகளை அபிவிருத்தி செய்ததன் பின்னர் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அல்லது காணி உரித்துடைய நிறுவனம் அல்லது வேறு தரப்பினருக்கு பொறுப்பளித்தல் விவசாயிகள் முகங்கொடுத்துள்ள மேலும் ஒரு சிக்கலாகும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை...

2024-03-01 02:28:09
news-image

வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களின்...

2024-03-01 02:04:26
news-image

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின்...

2024-03-01 01:15:03
news-image

சபாநாயகரின் தீர்மானம் பிழை என்றால் நீதிமன்றம்...

2024-02-29 23:54:44
news-image

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கை...

2024-02-29 21:51:35
news-image

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் சட்டவாட்சிக்கு...

2024-02-29 23:03:12
news-image

மன்னாரில் 53 ஆயிரம் போதை மாத்திரைகள் ...

2024-02-29 21:52:22
news-image

சந்தேகத்திற்கிடமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட...

2024-02-29 21:54:10
news-image

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர...

2024-02-29 21:55:44
news-image

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024-02-29 21:52:44
news-image

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்துக்கு தயங்க...

2024-02-29 21:49:28
news-image

மலைப் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டம் விரிவுபடுத்தப்படும்...

2024-02-29 21:48:58