இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் பலரும் இணையத்தில் மற்றும் கைபேசியில் வீடியோ கேம் விளையாட்டிற்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

இவர்களை மீட்டெடுப்பது எப்படி? என்று தெரியாமல் பெற்றோர்களும் தடுமாறுகிறார்கள். இந்நிலையில் இவர்களை மீட்பதற்கு அறிவாற்றல் நடத்தை சிகிச்சை எனப்படும் cognitive behavioural therapy என்ற புதிய சிகிச்சை நல்லதொரு நிவாரணத்தை வழங்குவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் இன்றைய திகதியில் 2.5 பில்லியன் மக்கள் வீடியோ கேம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் 120 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தீவிரமாக வீடியோ கேம் விளையாடுவதில் விருப்பம் கொண்டவர்கள் என்று அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

நண்பர்களுடன் பொழுதுபோக்குக்காக விளையாடலாம் என்ற அளவில் அறிமுகமாகும் இத்தகைய வீடியோ கேம் விளையாட்டுக்களுக்கு நாளடைவில் ஏதேனும் ஒரு வடிவத்தில் இதற்கு அடிமையாகிறார்கள். அடிமையாவேர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இதனால் இவர்களுக்கு உளவியல் சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களை இத்தகைய பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பதற்காக அறிவாற்றல் நடத்தை சிகிச்சை எனப்படும் cognitive behavioural therapy என்ற சிகிச்சை நல்லதொரு பலனை வழங்கிவருவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய சிகிச்சைக்கு பிறகு தீவிரமாக  அடிமையானவர்களை  60 சதவீதத்தினர் இந்தப் பழக்கங்களில் இருந்து மெல்ல மெல்ல தங்களை விலக்கிக்கொள்ள  மனதளவில் தயாராகிறார்கள்.  மீதமுள்ள 40 சதவீதத்தினருக்கு தொடர்ந்து இந்த சிகிச்சையை வழங்கப்பட்டால் அவர்களும் இதிலிருந்து மீள கூடுமென்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் ராஜ்மோகன்.

தொகுப்பு அனுஷா.