ஆடை உற்பத்தி மற்றும் நிறுவன செயற்பாடுகளை துரிதப்படுத்த உதவிய 144 தொழிலாளர்களை டெக்ஸ்டர்ட் ஜெர்சி நிறுவனம் "Achievers Awards 2016" மூலம் அண்மையில் கௌரவித்தது.
இந்த நிகழ்வின் போது நிறுவனம் சிறந்த தொழிலாளர்களுக்கான விருதை Associate, Staff மற்றும் Executive என்ற பிரிவுகளின் கீழ் வழங்கியிருந்ததுடன் சிறந்த சிந்தனைகளை முன்வைத்த தொழிலாளர்களை AIM (All Ideas Matter) என்ற நிகழ்சித்திட்டத்தின் கீழ் கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத்தெரிவித்த நிறுவனத்தின் மனிதவள முகாமைத்துவ பிரதானி பிரபாஷ் ஹெட்டியாரச்சி கூறுகையில் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்னவெனின் நிறுவனத்துக்கு சிறந்த சேவை மற்றும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சேவையாற்றும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை கௌரவிப்பதாகும் . இதன்மூலம் தொழிலாளர்களுக்கு நிறுவனத்தை பற்றிய ஒரு சிறந்த மனப்பாங்கை உருவாக்க முடிவதுடன் நிறுவனத்தின் செயற்திறனையும் மேம்படுத்த முடியும் என்றார்.
இந்த வருடம் TJ நிறுவனம் AIM நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறந்த சிந்தனைகளை முன்வைத்த மூன்று தொழிலாளர்களை தேர்ந்தெடுத்தது. இதன் போது நிறுவனத்துக்கு புதிய வர்ண சூத்திர முறையொன்றை அறிமுகப்படுத்திய நிலந்த டயஸ் மூன்றாவது இடத்தையும், Baby வர்ண இயந்திரத்திலிருந்த குறைபாட்டை கண்டறிந்து அதற்கு தீர்வை வழங்கிய ஜயசிரி ஜீவாலோக மற்றும் நிலந்த அல்விஸ் என்பவர்கள் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டனர்.
முதலாவது இடத்தை பின்னல் வேலை (Knitting) பிரிவின் முகாமைத்துவரான ஸஜீவ சன்ட்ரசிரி மற்றும் அப்பிரிவின் நிர்வாகியான உபுல் ஆரியரத்ன என்பவர்கள் வென்றெடுத்தனர். இவர்கள் ஆடை மற்றும் பின்னல் வேலைகளுக்கு ஒரு புதிய தரக்கட்டுப்பாட்டு முறையொன்றை அறிமுகப்படுத்தியிருந்ததுடன் தன்னிச்சையாக செயற்படக்கூடிய செயற்திட்டமொன்றையும் அறிமுகப்படித்தியிருந்தனர். இதன் மூலம் அந்த பிரிவில் இருந்த இயந்திரங்களின் செயலிழப்பு நேரத்தை அதிகமாக குறைக்க முடிந்ததுடன் செயற்திறனையும் அதிகரிக்க முடிந்துள்ளது.
இதற்கு மேலாக நிறுவனத்துக்கு நீண்ட காலமாக சேவையாற்றிவரும் தொழிலாளர்கள் 5,10 மற்றும் 15 வருடங்கள் என்ற பிரிவுகளின் கீழ் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது கருத்து தெரிவித்த TJ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஸ்ரியான் டி ஸில்வா விஜேரத்ன கூறுகையில் இந்த நிகழ்ச்சியானது நிறுவனத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை பூர்த்திசெய்துள்ளதுடன் சிறந்த தொழிலாளர்களையும் தேர்ந்தெடுக்க முடிந்ததுள்ளது என்றார். அவர் மேலும் கூறுகையில் எமது தொழிலாளர்களின் விடாமுயற்சி மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு எமது நிறுவனத்தை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளதுடன் இலங்கையில் முதற்தர 25 நிறுவனங்கள் பட்டியலிள் எமது நிறுவனத்தின் நாமத்தை பதிவி செய்யவும் முடிந்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM