அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பு புறக்கோட்டையில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றை இன்று (13) முன்னெடுத்துள்ளது.

குறித்த ஆர்பாட்டத்தின் காரணமாக புறக்கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள்  “மாலபே சயிட்டம் தனியார்  வைத்தியக் கல்லூரி வேண்டாம்” “கல்வி கடைகள் வேண்டாம்” “பாடசாலைகளில் மேற்கொள்ளும் கட்டண அறவீடுகளையும் நிறுத்து” “அனைவரும் உயர்கல்வியை தொடரக்கூடிய உரிமையை உறுதிசெய்” உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.