மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வேகப் பந்து வீச்சாளரான லசித் மலிங்க ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார்.

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில் மும்மை அணிக்காக விளையாடும் லசித் மலிங்க, தந்தையின் உடல் நலக்குறைவு காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஐ.பி.எல். போட்டியை துறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

37 வயதான மலிங்கா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமைக்குரியவர்  (170 விக்கெட்) வீழ்த்திய பெருமைக்குரியவர்.