Mercmarine Training இலங்கையின் இளைஞர்களுக்கான உலகத்தரம் வாய்ந்த கடல்சார் கல்விக்கான பாதையை வழங்குகின்றது. அடுத்த உட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை பெற தயாராக உள்ளது.

Mercmarine Training  என்பது Mercmarine குழுமத்தின் கடல் சார் பயிற்சி நிறுவனம் ஆகும்.

இலங்கையில் உலகத்தரத்திலான கடல்சார் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களை வரவேற்றிட தயார்நிலையிலுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் பாரிய தெரிவுகளைக் கொண்ட கற்கைநெறிகளுக்கு தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Mercmarine Training இன் கற்கைநெறிகள் “Officer Training” இனை உள்ளடக்கியுள்ளது. இது ,Navigation Officer Cadet மற்றும் Engineering Officer Cadet training இனை வழங்குவதுடன் “Rating Training” ஆனது Deck Rating, Engine Rating மற்றும் Catering Rating training என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளது. Mercmarine Training இதற்கு மேலதிகமாக பல்வேறு தலைப்புக்களில் குறுகிய கால கற்கைநெறிகளையும் வழங்குகிறது. அத்துடன் STCW (Standards of Training, Certification மற்றும் Watchkeeping for Seafarers) மற்றும் non-STCW, training, Simulator Training on Engine Simulators  மற்றும் Navigation Simulators போன்றவை உள்ளடங்கலாக பல்வேறுபட்ட தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி நெறிகளையும் வழங்குகிறது.

Mercmarine Training இன் அதிநவீன பயிற்சி வசதிகள், மாணவர்கள் கடலில் தங்கள் தொழில்சார் வாழ்க்கையைத் தொடர்வதற்கான சிறந்த சூழலை வழங்குகிறது. deck, engine மற்றும் catering ஆகியவை தொடர்பான கல்வியினை அனைத்து தரங்களிலும் தகைமைகளிலும் வழங்குவதில் இலங்கையில் தலைசிறந்த வசதிகளைக் கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Mercmarine Training ஆனது தொடர்ந்தும் கடல்சார் தொழிற்துறை நிபுணர்களை உருவாக்கி வருகிறது. மேலும் திறமையான இளைஞர்களை இத்தொழிற்துறைக்கு ஈர்ப்பதில் ஒரு உத்து சக்தியாக இருந்து வருகிறது. அனைத்து கற்கைநெறிகளும் மதிப்புமிக்க கடல்சார் தொழிற்துறைகளின் தேவைகளுக்கமைய வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை இக்கல்வி நிறுவனமானது பல முன்னெடுப்புக்களை மேற்கொள்வதிலும் முன்னணி வகிக்கிறது. 

பெண் கெடட் இனரில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பெண் மாணவர்களுக்கு ரூபா 2 மில்லியனுக்கும் அதிகமான தொகை விஷேட புலமைப்பரிசில்களாக வழங்கப்பட்டது. அது இவ்வருடமும் தொடரவிருக்கிறது.

கெப்டன். ரொஹான் கொடிப்பிலி – சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி - Mercmarine Group கருத்து தெரிவிக்கையில்,

“ Mercmarine இல் எமது வணிகமானது கப்பல் போக்குவரத்து ஆகும். கப்பல் உரிமை மற்றும் கப்பல் முகாமைத்துவம் முதல் அதன் குழு முகாமைத்துவம் வரை மற்றும் கடல் சார் பயிற்சி போன்ற அனைத்து துறைகளிலும் நாங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளோம் என்பதனை இது நிரூபிக்கிறது. Mercmarine Training ஊடான எங்கள் கடல்சார் தொழில் பயிற்சிகள் எனும் போது எங்கள் நோக்கம் இருமடங்காகிறது.

ஒன்று, கடல் சார் தொழிலில் ஈடுபடும் ஒருவருக்கு தேவையான நுட்பங்கள் பற்றிய கல்வி அறிவை வழங்குவது.

மற்றையது, தொழில்நிபுணத்துவம் பெற்ற கடல் சார் தொழிலில் (seamen) நீண்ட கால அனுபவம் கொண்டவர்களால் அவர்களின் திறமைகளைக் கொண்டு நடைமுறைப் பயிற்சி அளிக்கப்படுவது. முன்பு போலல்லாது தற்போதைய கப்பல்கள் மிகவும் நவீனத்துவம் வாய்ந்தவை. கப்பல் சேவை பணியாளர்கள் குழு மிகவும் சிறியது. பயணங்களும் குறுகியவை. இதன் விளைவாக புதிதாக சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருத்தல் அவசியம். அத்தோடு ஒழுக்கமானவர்களாகவும் சவால்களை எதிர்கொள்வதற்கு முதலாவது நாள் முதல் தயார் நிலையில் இருப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். அதனால் எமது பயிற்சிகளும் இப்புதிய தேவைகளுக்கு ஏற்றவாறே உள்ளன. Mercmarine கடந்த 34 ஆண்டு காலமாக கடற்தொழில்துறையில் உள்ளோருக்கு வெற்றிகரமாக பயிற்சியளித்து வருகிறது. மேலும் தொடர்ந்தும் பல்லாண்டு; காலத்துக்கும் பல இளைஞர்களுக்கு மகிழ்ச்சியூட்டிடும் இக்கப்பல் உலகுக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிட காத்திருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

Mercmarine Group of Companies நான்கு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. கப்பல் உரிமை, கப்பல் முகாமைத்துவம், கப்பல் சேவைப் பணியாளர் முகாமைத்துவம் மற்றும் கடல் பயிற்சி ஆகியவை. இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்று ஒரே வர்த்தக நாமத்தின் கீழ் பல்வேறு தெரிவுகளைக் கொண்ட சேவைகளை வழங்குகின்றது. Mercmarine குழுமத்தின் கப்பல் சேவை பணியாளர் குழுவின் முகாமைத்துவம் Mercantile Marine Management (MMM) இனால் கையாளப்படுகிறது. இது இக்குழுவின் முதன்மை நிறுவனமுமாகும். 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட MMM ஆனது கப்பல் சேவை பணியாளர் குழுவின் முகாமைத்துவத்தில் தேர்ச்சிபெற உள்நாட்டு, இருப்பிடம் மற்றும் தொழிற்துறை சாதகத் தன்மைகளில் மூலதனமிட்டுள்ளது. MMM இன் கப்பல் சேவை பணியாளர் குழுவின் முகாமைத்துவத்தின் சேவை தொழில் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. 

அத்தோடு இலங்கையின் கடற்தொழிற்துறையின் மிகப்பெரிய குழுவிலிருந்து பல்வேறுவகையான கப்பல்களுக்கான துல்லியத்தையும் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பெற முடியும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் தனித்துவமான சேவைக்குழுவுக்கு உறுதியளிக்கிறது. Mercmarine Training மற்றும் அதன் கற்கை நெறிகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள  www.mercmarinetraining.netஎன்ற எமது இணையதளத்தை அணுகுங்கள்.