மஸ்கெலியா  பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் நேற்று 2 ஆம் திகதியன்று 13 தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய 13 தொழிலாளர்களில் 10 தொழிலாளர்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியதாகவும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இச்சம்பவானது தோட்டத்தில் கொழுந்து பறித்திக்கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகியதாக தோட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டதுடன் குளவி கூடுகளை அகற்ற உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.