பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடைவிதித்து இந்திய மத்திய அரசாங்கம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

டிக்டொக் உள்ளிட்ட 54 செயலிகளுக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு தடைவிதித்தது. 

இந்த நிலையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளை தடை விதித்து இந்திய மத்திய அரசு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொதுமக்களின் நலன்கருதியும் இந்த தடை உத்தரவு பிறபிக்கப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பப்ஜி விளையாட்டுவதால் இளைஞர்கள் மனஅழுத்ததுக்கு ஆளாகி வருவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளன. மேலும், இதுபோன்ற செயலிகள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்பதும் தெரிய வந்தது. 

தடைவிதிக்கப்பட்ட இந்தியாவின் செயலிகள் விபரம்: