ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வபத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான துபாயில் இரண்டு தனித்தனியான வெடிப்பில் திங்களன்று மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்ததாக அந் நாட்டு காவல்துறை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

தலைநகரில் நடந்த வெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அபுதாபி அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இது நகரின் ரஷீத் பின் சயீத் தெருவில் உள்ள கே.எஃப்.சி மற்றும் ஹார்டீஸ் உணவகங்களைத் தாக்கியதாக தேசிய நாளிதழ் தெரிவித்துள்ளது.