அக்கரைப்பற்று வயல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு! 

By R. Kalaichelvan

02 Sep, 2020 | 11:41 AM
image

அம்பாறை அக்கரைப்பற்று மொட்டையா மலையின் மேல் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று சாகாமம் வயல் பகுதியில் உள்ள மொட்டை மலையில் மேல் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதை இன்று புதன்கிழமை காலையில்  கண்ட விவசாயிகள் பொலிசாருக்கு தகவல் வழங்கினர். 

இதனையடுத்து குறித்த மலையின் மீது பொலிசார் உருக்குலைந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டுள்ளனர் சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right