(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

வடக்கு புகையிரதபாதை அமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சு பாரிய கடன் சுமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை எவ்வாறு செலுத்த போகின்றோம் என்ற சவால்களுடன் பயணத்தை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.

இன்று புதன்கிழமை பாராளுமன்றில் கடற்றொழில் நீர்வளத்துறை போக்குவரத்து சிவில் விமான மற்றும் கப்பற்துறை அமைச்சர்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.