(செய்திப்பிரிவு)

மின்னேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜயந்திபுர பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜயந்திபுர பகுதியிலுள்ள வயலில் அறுவடை செய்து கொண்டிருந்த போது தம்பதிகள் இருவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது மின்னல் தாக்கத்தால் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. காயமடைந்த குறித்த பெண்ணின் கணவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.