மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இயங்கும் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விஜயம் மேற்கொண்டார்.

நேற்று திங்கள்கிழமை 31.08.2020 இடம்பெற்ற அவரது விஜயத்தின்போது மாவட்ட ஊடக அலுவலகத்தில் நிலவும் ஆளணி உட்பட இன்னும் பௌதீக தேவைகளையும் விரைவாக நிவர்த்தி செய்து தருவதாக அவர் உறுதியளித்ததாக மாவட்ட ஊடகப் பிரிவின் தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் தெரிவித்தார்.

மேலும், அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சார்ந்த தகவல்கள் செய்திகள், ஊடக அறிக்கைகள், அமைச்சரவைத் தீர்மானங்கள் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் இப்பிரிவின் செயற்பாடுகள் குறித்தும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தகவல் ஊடக அதிகாரியிடம் கேட்டறிந்து கொண்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப் பிரிவு 1999ஆம் ஆண்டு முதல் நாட்டிலுள்ள மாவட்ட செயலகங்களில் செயற்பட்டு வருகின்றது.