இலங்கையில், நேற்றையதினம் கட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா எனப்படும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் மேலும் 8 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் நேற்றையதினம் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,868 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 169 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 50 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியகண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.