தலைமறைவாகியிருந்த களுத்துறை சிறை கைதி மடக்கிப் பிடிப்பு!

31 Aug, 2020 | 11:52 PM
image

(செய்திப்பிரிவு)

களுத்துறை சிறையிலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்த பாதகட அகுலுவா எனும் கைதி ஒரு மாதத்தின் பின்னர் இன்று திங்கட்கிழமை காலை களுத்துறை - நாகொட வைத்தியசாலையின் பின் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான நபரொருவர் நாகொட பொது வைத்தியசாலைக்கு பின் பகுதியில் நீண்ட நேரமாக இருப்பதாக களுத்துறை உப பொலிஸ் பரிசோதகரான சந்திரசிறி விதானவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.  இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே  குறித்த நபர் ஹெரோயின் தொடர்பான வழக்கில் கைதானவரெனவும் கடந்த மாதம் களுத்துறை சிறையில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த கைதி என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் சந்தேகநபர் குறித்த பகுதியில் பொலிஸ் ஜீப் வருவதைக் கண்டு தப்பியோட முற்பட்டுள்ளார். அதன்போது பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் மடக்கிக் பிடித்து கைது செய்யப்பட்டதாக உப பொலிஸ் பரிசோதகரான சந்திரசிறி விதான தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் போலியான பெயரை பொலிஸாரிடம் கூறியிருந்ததாகவும்;, கடந்த மாதம் இரண்டாம் திகதி இன்னும் 2 நபர்களுடன் இணைந்து களுத்துறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரின் தாய் சுகயீனம் காரணமாக நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் அவரை பார்வையிடுவதற்காகவே சந்தேகநபர் வைத்தியசாலையின் பிரதான வாயிலால் செல்லாமல் வைத்தியசாலையின் பின்பக்க மதிலால் பாய்ந்து செல்வதற்காக வைத்தியசாலை வளாகத்துக்கு வெளியில் இருந்தாரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

குறித்த சந்தேகநபர் சிறைச்சாலையை விட்டு தப்பி சென்ற காரணத்தால் சிறைச்சாலை அதிகாரிகள் பலர் வேலைநீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பித்தக்கது.  சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35