யாழ்பாணம் - செம்முனை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் இன்று (13) காலை  கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் 34 வயதான யாழ்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சை பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இன்று குறித்த சந்தேக நபரை யாழ்பாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.