பருத்தித்துறை கடற்பரப்பில் பாதுகாப்பு அங்கி அணியாமல் கடற்தொழிலுக்காக படகு ஒன்றில் பயணித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மீனவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் இந்த உத்தரவை வழங்கினார்.

பருத்தித்துறை கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், படகு ஒன்றில் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் இருவரை கடந்த செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 25) இரவு கைது செய்தனர். அந்தப் படகில் அனைத்து வசதிகளும் இருந்த போதும் மீனவர்கள் இருவரும் பாதுகாப்பு அங்கி அணியாததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீனவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு அங்கி அணியாமல் தொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மீனவர்கள் இருவரும் குற்றத்தை ஒத்துக்கொண்டு மன்றுரைத்தனர்.

அதடினடிப்படையில் மீனவர்கள் இருவரையும் தலா 25 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.