2016ஆம் ஆண்டிற்கான தேசிய HR Excellence விருதினை வென்ற பிரவுன்ஸ்

Published By: Robert

13 Jul, 2016 | 01:52 PM
image

சிறந்த மனிதவள முகாமைத்துவச் செயற்பாடுகளினூடாக நிறுவன ரீதியான  ஆற்றுகையினை செயற்படுத்தும் மிகச்சிறந்த பங்களிப்பு

Brown & Company PLC ஆனது கடந்த 21 ஆம் திகதி ஜூன் மாதம் 2016 அன்று பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய HR Excellence விருதுகளில் மதிப்புமிக்க விருதினை தனதாக்கிக் கொண்டது. இவ்வைபவத்தில் பிரவுன்ஸ் ஆனது சிறந்த மனிதவள முகாமைத்துவச் செயற்பாடுகளினூடாக நிறுவன ரீதியான ஆற்றுகையினை வெளிப்படுத்தியமையால் தங்க விருதினை தட்டிக்கொண்டது.  

Institute of Personnel Management Sri Lanka (IPM) இனால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மனிதவள முகாமைத்துவ மகா நாடானது பெறுமதி வாய்ந்த மனித வளம் மற்றும் மக்கள் முகாமைத்துவ செயற்பாடுகளினூடாக பணியாளர்களிடமிருந்து சிறந்ததை வெளிக்கொணரும் தலைசிறந்த மனிதவள முகாமை நிறுவனங்கள் மற்றும் தொழில்வல்லுனர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதற்காக ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்றது. இலங்கை மனித வள சமூகத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட தொடரான பிரபல்யமான விருதுகள் இவ்வைபவத்தில் வழங்கப்பட்டன.  

இவ்வகுதியில் போட்டியிட்ட கூட்டு நிறுவன போட்டியாளர்களின் மத்தியிலிருந்து பிரவுன்ஸ் தெரிவுசெய்யப்பட்டது. கூட்டு நிறுவன உலகில் தனது நாமத்தினை பொறிப்பதற்கு இவ்விருது துணை புரிந்த அதேவேளை பிரவுன்ஸின் 140 வருட கால வரலாற்றில் இது குறிப்பிடத்தக்கவொரு மைல் கல்லாகும் என்பதுடன் இது பிகப்பெரியதும் மிகச்சிறந்ததுமான நிறுவனசார் எதிர்காலத்திற்கான பாரியதொரு முன்னெடுப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது    

மதிப்புமிக்க நிறுவனங்களின் மத்தியில் இவ்விருதிற்காக தெரிவு செய்யப்படுதலானது அத்தனை இலகுவானதொன்றல்ல, கடுமையான வகுதியில் தரப்படுத்தப்பட்ட மிகச்சிறந்த நிறுவனங்கள் மாத்திரமே கவனத்திற்கொள்ளப்பட்டன. நடுவர் குழாமானது குறித்த தொழிற்துறையில் ஆழமான சிறப்புத்தேர்ச்சியினையுடைய மதிப்புமிக்க  மனித வள தொழில்வாண்மையாளர்களைக் கொண்டமைந்ததாகும்.  

தனது ஊழியர்களை அதன் மிகப்பெறுமதியான சொத்தாகக் கருதுகின்ற அதேவேளை சிறந்ததொரு தொழிற்சூழலை ஏற்படுத்தித் தருவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும்  அது மாத்திரமன்றி புத்தாக்கமானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான மக்கள் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு  நிறுவனமாக பிரவுன்ஸ் விளங்குகின்றது எனும் நிதர்சன உண்மைக்கு இவ்விருது சான்றாகின்றது. பிரவுன்ஸினது அனைத்து உள்ளக தொழிற்பாடுகளும் அதன் பணியாளர்களுக்கு அதிசிறந்ததினையும் மற்றும் பெறுமதியினையும் வழங்கும் நோக்குடன் அமைந்ததுடன் அவர்களின் வாழ்க்கை வட்டத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் துணை புரிவதனை நோக்கியே உந்தப்படுகின்றது.     

“பிரவுன்ஸினது மனிதவள முகாமைத்துவம் தொடர்பான நோக்கினை நாம்  இரண்டு வருடங்களுக்கு முன்பு மீள வரையறுத்ததுடன் பிரவுன்ஸினை மிக உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு சென்று இனிவரும் காலங்களில் தொழில் புரிவதற்கு வாய்ப்பாயுள்ள மிகச்சிறந்த கம்பனிகளுள் ஒன்றாக இதனை தாபிப்பதனையும் தேவைப்படுத்திக்கொண்டோம். இவ்விருதினை வென்றமையானது எமது இந்த நோக்கினை மெய்ப்பிப்பதற்கு குழுவாக சேர்ந்து நாம் மேற்கொண்ட கடின உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் அங்கீகாரமாகக் கிடைத்த அறிய வாய்ப்பாகவே விளங்குகின்றது. மிகச்சிறந்த சில கூட்டு நிறுவன போட்டியாளர்களின் மத்தியில் நாம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையினை முன்னிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். ”என மனித வளங்கள் முகாமைத்துவக் குழுமத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் பதும சுபாசிங்க தெரிவித்தார்.      

“தொழிலுக்கான உரிய பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், அறிவினை பகிர்ந்துகொள்ளும் செயன்முறைகள் முதலியவற்றை ஒவ்வொரு பணியாளரும் பெற்று தொழிற்துறையில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக அதற்குரிய செயன்முறைகள் மற்றும் ஏற்பாடுகளை நாம் நிறுவியுள்ளோம். பணியாளர்கள் தமக்கு தேவையான தனிப்பட்ட பயிற்சித் தேவைப்பாடுகளை அடையாளம் கண்டு அவற்றினை பெற்றுக்கொள்வதன் மூலம் தம்மை வளப்படுத்திக்கொள்வதற்கு உற்சாகமளிக்கும் தொழிற் சூழலை நாம் ஏற்படுத்தியுள்ளோம்” என பதும சுபாசிங்க மேலும் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “பணியாளர்களை பொறுத்த மட்டில் நிறுவனத்திற்கு தம்மாலான சிறந்ததினை வழங்குவது அவர்களது கடமையாகும் ஆயினும் அதனிலும் முக்கியமாக நிறுவனத்தின் முகாமைத்துவம் மற்றும் முறைமைகள் ஆகியன ஒவ்வொரு பணியாளருக்கும் தான் பிரவுன்ஸில் பணியாற்றுவதனையிட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் புன்னகை புரிவதற்கான உந்துதலையும் காரணத்தினையும் தவறாது வழங்குவதாக அமைய வேண்டும். பிரவுன்ஸ் குழுமத்தின் தவிசாளர், பணிப்பாளர் சபையினர் ஆகியோரின் சகல முன்னெடுப்புகளிலும் ஊழியர்களின் நலனிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மேலும் திறந்த, நெகிழ்வான மற்றும் அக்கறை செலுத்தும் முகாமைத்துவ முறை ஒன்றினை உருவாக்குவதற்கு நாம் சித்தமாயுள்ளோம். இதனால் எமது ஊழியர்கள் நிறுவனத்தின் குறிக்கோள்களுக்காக தமது அதிகபட்ச ஆதரவினை வழங்குவதற்கான பொறிமுறையில் உந்தப்படுவர். சிறந்த மனித வள முகாமைத்துவ நடைமுறைகளானவை நிறுவனசார் குறிக்கோள்களையும் மற்றும் அதிகரிக்கப்பட்ட உற்பத்தித் திறனையும் அடைந்து கொள்வதற்கு துணை புரியும்.” என்றார்.

Brown & Company PLC ஆனது பல்வேறுபட்ட மட்டங்களில் திரட்சியானதும், மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதும் மற்றும் சந்தை நிலைகளில் சிறந்த இடங்களை கைப்பற்றி இருப்பதுடன், முக்கிய கைத்தொழிற் பிரிவுகளினூடாகப் பெற்ற பெறுமதி வாய்ந்த உற்பத்தித் தொகுப்பினைக் கொண்டதுமான நிறுவனமாகும். வலு உற்பத்தி, வீட்டு மற்றும் அலுவலக சாதனங்கள், விவசாய மற்றும் பயிரிடல் துணைச் சேவைகள், மருந்துப்பொருட்கள்,  முதலீடுகள், கடல்சார் மற்றும் உற்பத்திகள் மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கான உற்பத்திகள் போன்ற துறைகளில் பிரவுன்ஸ் நிறுவனம் வியாபித்துள்ளது.

இலங்கை நுகர்வோரின் தேவைகளை ஆழமாக அறிந்து கொண்டு 140 வருடங்களுக்கும் மேலாக நுகர்வோருடன் இணைந்து இருப்பது, அதன் அனைத்துப் தொழிற்பாட்டுப் பிரிவுகளிலும் குழுமத்திற்கு வெற்றியினையே அளித்துள்ளது. பிரவுன்ஸ் குழுமமானது  காலத்திற்கு ஏற்றவாறான மாற்றங்களை அதிலும் குறிப்பாக வாடிக்கையாளர்களின் தேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய  இயலுமாந்தன்மையில் சிறந்து விளங்குகின்றது.          

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓய்வூதியம் பெறுவோருக்கான டிஜிட்டல் முறையிலான புகையிரத...

2025-03-26 11:21:11
news-image

பாதெனிய, ஸ்ரீ சுனந்த மகா வித்தியாலயத்தில்...

2025-03-26 14:11:15
news-image

ஆறாவது தடவையாக 2025ஆம் ஆண்டுக்கான 'School...

2025-03-25 18:01:02
news-image

முடிவடைந்த ஆண்டுக்கான இலாபத்தை ரூ.1,150 மில்லியனாக...

2025-03-25 15:13:59
news-image

SLISB மறுசீரமைப்பு இழப்பான 45 பில்லியன்...

2025-03-25 14:26:31
news-image

2024 தேசிய விற்பனை விருது வழங்கும்...

2025-03-25 12:37:59
news-image

Prime Group வீட்டு உரிமையாண்மை மற்றும்...

2025-03-24 20:22:43
news-image

அபேக்ஷா மருத்துவமனையின் இளம் நோயாளிகளுக்கான செலான்...

2025-03-20 11:03:29
news-image

ACCA Srilanka Awards 24 விருதுகள்...

2025-03-20 10:45:24
news-image

Tata Motors, DIMO உடன் இணைந்து,...

2025-03-19 09:47:50
news-image

மக்கள் வங்கி ஒருங்கிணைந்த மொத்த வருமானமாக...

2025-03-18 11:55:47
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் சுபபெத்தும்...

2025-03-18 11:42:58