கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30 வயதுடைய யுவதியொருவரை தாக்கி காயப்படுத்திய  சந்தேகத்தின் பேரில் யுவதியின் காதலனை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில்  நீதிவான் சானிக்கா பெரேரா இன்று (31) உத்தரவிட்டார்.

கந்தளாய், லைட்வீதி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீண்ட காலமாக 30 வயதுடைய யுவதியுடன் தகாத தொடர்புகள் வைத்திருந்து வந்த நிலையில், குறித்த யுவதி வேறு ஒருவருடன் தொடர்புகளை பேணி வருவதாக சந்தேக நபருக்கு தகவல் கிடைத்ததையடுத்து மது போதையுடன் யுவதியின் வீட்டுக்குச் சென்று தாக்கியுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயங்களுக்குள்ளான யுவதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கைது செய்து கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

யுவதி கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.