(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்யாமல் ஒரு நாடு- ஒரு சட்டம் என்ற நிலைப்பாட்டுக்குள் அனைத்து  இன மக்களும் ஒன்றுப்படும் புதிய  அரசியமைப்பு உருவாக்க  கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில்  இனங்களுக்கும்,  மாகாணங்களுக்கும் வலுசேர்க்கும் விதத்தில் விடயங்கள் ஒருபோதும் உள்ளடக்கப்படமாட்டாது எனவும்  கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்தார்.

பிலியந்தல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.