ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் தோட்ட பகுதியில் 36 வயது குடும்பஸ்தா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. 

இரண்டு பிள்ளைகளின் தந்தையான காந்தருபன் என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.சதீஸ்