கல்கிஸையில் மூன்று நைஜீரியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

செல்லுபடியாகும் விசா இல்லாமல் நைஜீரியர்களுக்கு நாட்டில் தங்க உதவிய இரண்டு இலங்கையர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

இந்த ஐந்து சந்தேக நபர்களும் நேற்று காவல் துறையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில் 13 சீனா மற்றும் தாய்லாந்து நாட்டவர்களும் செல்லுபடியாகும் விசா இல்லாத குற்றச்சாட்டுக்காக கல்கிஸை பகுதியில் கைதுசயெ்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.