துவிச்சக்கர வண்டிகள் திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 4

30 Aug, 2020 | 08:30 PM
image

(செய்திப்பிரிவு)

காலி - மிட்டியாகொட மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற துவிச்சக்கர வண்டிகள் திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஹிக்கடுவை - மலவென்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட 10 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் 20 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் அவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு திருடுகின்ற துவிச்சக்கர வண்டிகளை குறைந்த விலையில் விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு போதைப்பாருட்களை  கொள்வனவு செய்வதை சந்தேகநபர் வழக்கமாகக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர் மிட்டியாகொட, கரந்தெனிய, அஹூன்கல்ல மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் இதுவரையில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை

2026-04-13 12:02:43
news-image

நுகர்வோர் பாதுகாப்பு ஏப்ரல் 30 வரை...

2026-04-13 11:25:16
news-image

உற்சவ கால விசேட சுற்றிவளைப்பு: 817...

2026-04-13 11:14:06
news-image

அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானங்களே நாட்டின் எதிர்கால...

2026-04-13 10:56:57
news-image

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான 3...

2026-04-13 10:51:45
news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53