(செ.தேன்மொழி)
அக்மீமன பகுதியில் முகப்புத்தகம் (பேஸ்புக்) நண்பர்காளால் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துக் கொண்டதாக பெண்கள் இருவர் உட்பட 28 பேர் கைது செய்யப்டபட்டுள்ளனர்.
அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்ஜம்புகஹா பகுதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அக்மீமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மாத்தளை , அநுராதபுரம் , மொரட்டுவ , அம்பாறை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 28 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கராபிட்டி பகுதியைச் சேர்ந்த நபராலேயே இந்த களியாட்டு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் , ரன்ஜம்புகஹா பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது அங்கிருந்த சிலர் சுய நினைவற்று போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM