(செய்திப்பிரிவு)

பாதுக்கை - பெல்பொலமுல்ல இறப்பர் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பானது நேற்று சனிக்கிழமை பிற்பகல் மேல்மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றிவளைப்பின்போது 342 லீற்றர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மேற்கு தும்மோதற பகுதியைச் சேர்ந்த 52 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.