நாட்டின் பல பகுதிகளில் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது  ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.புறக்கோட்டை
புறக்கோட்டை - முதலாம் ரோஹிணி வீதியில் சனிக்கிழமை மாலை 2 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹங்வெல்ல
ஹங்வெல்ல பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 20 கிராம் 500 மில்லிகிராம் ஹெரொயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபருக்கு விற்பனை செய்வதற்காக 55 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை  காரொன்றில் கடத்திய மற்றுமொரு சந்தேகநபர் சனிக்கிழமை மாலை எம்புல்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

முதலாவது சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கலஹேன்கந்த மற்றும் அம்பேகம பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 45 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

பொத்துவில்
பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டிக்குளம் வனப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 3 கிராம் 330 மில்லிகிராம் ஹெரொயின் போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.