(செய்திப்பிரிவு)

கிரிபாவ - ஒருகல வீதியில் சனிக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சியம்பலாகொட - பொல்கஸ்ஒவிட பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.