தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மிலினது பிணை மறுக்கப்பட்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஊடகப்பேச்சாளருமான முஹமட் முஸம்மில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த மாதம் ஆஜராகியிருந்தவேளை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.