22 முதல் 49 மீட்டர் (72 மற்றும் 160 அடி) விட்டம் கொண்ட ஒரு சிறுகோள் செவ்வாயன்று பூமியை அண்மித்து பயணம் செய்யும் என்று அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) தெரிவித்துள்ளது.

செப்டெம்பம் முதலாம் திகதி பூமியை அண்மித்து பயணம் செய்யும் '2011 ES4' என்ற இக் கோளானது சந்திரனை விட நமது கிரகத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

சந்திரன் பூமியை சுற்று வரும்போது 3.84 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பயணம் செய்யும், ஆனால் இக் கோளானது தூரம் 1.2 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை அண்மித்து பயணம் செய்யவுள்ளது.

எனினும் 2011 ES4 என்ற இக் கோளானது  பூமியைத் தாக்கும் நிகழ்தகவு கிட்டத்தட்ட மிகக் குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2011 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறுகோள் ஒவ்வொரு ஒன்பது வருடங்களுக்கும் பூமியை அண்மித்து பயணம் செய்யும் என்பதால் இது மற்றொரு தசாப்தத்திற்கு பூமிக்கு மிக அருகில் பயணம் செய்யக்கூடும்.

இறுதியாக அது ஒரு நெருக்கமான அணுகுமுறையை மேற்கொண்டபோது, அது எங்கள் கிரகத்திலிருந்து நான்கு நாட்கள் தெரிந்தது.  இருப்பினும், இந்த முறை இது முன்பை விட கிரகத்திற்கு மிக நெருக்கமாக இருக்கும். 

2011 ES4 என்ற இக் கோளானது மணிக்கு 29,367 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும்.