பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சகல பல்கலைக்கழகங்களில் உள்ள கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இன்று நண்பகல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு, ஊழியர்களின் காப்பீடு திட்டம்,  சேவை புரியும் காலத்தை 60 வயது வரை நீடித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நடைப்பெறவுள்ளது.

இதேவேளை, குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு பின்னர் சாதகமான முடிவு கிடைக்காதுவிடின் எதிர்வரும் 27 ஆம் திகதி முழுமையான ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.