கற்றல் செயற்பாடு  

Published By: Priyatharshan

29 Aug, 2020 | 04:19 PM
image

இலங்கையில் கற்றல் செயல்பாடுகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளமை மிகவும் ஆறுதலளிக்கும் செயற்பாடாகும். மாணவர்கள் வழமைபோன்று பாடசாலைகளுக்குச் சென்று வருகின்றனர்.

 அதேவேளை உயர்தரக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி என்பனவும் எவ்வித தடங்கலுமின்றி தொடர்ந்தால் மாத்திரமே கொரோனாவால் தடைப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முழுமையாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமையும். 

இதேவேளை  ஐக்கிய நாடுகள் சபை இழந்த கற்றல் செயற்பாட்டு நேரத்தை ஈடு செய்ய உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகின் பல நாடுகளில் கற்றல் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பாதிருப்பதை காணலாம்.

ஏதோ ஒரு ரூபத்தில் கொரோனாவின் அச்சுறுத்தல் அங்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இணையவழிக் கல்வி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

வளர்ந்த நாடுகளுக்கு இது சாத்தியமானாலும் வளர்முக நாடுகள் மற்றும் வறிய நாடுகளுக்கு இது தொடர்ந்தும் சவாலாகவே அமைந்து வருகிறது.

இதேவேளை உலகளாவிய ரீதியில் 463 மில்லியன் பிள்ளைகளுக்கு இணைய வழிக் கல்வியை மேற்கொள்ள முடியாதிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று ஊரடங்கு மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டமை என்பன இணைய வழிக் கல்விக்கு பெரும் இடைஞ்சலாக இருந்து வருகின்றன. 

உலகெங்கும் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி கிட்டவில்லை  என்றும், மின்சாரம் இன்மை, கணினி வசதியின்மை என்பனவும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை பெரிதும் பாதித்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும்  தசாப்தங்களில் பொருளாதார சமூக ரீதியாக இதன் தாக்கங்களை உணரக் கூடியதாக இருக்குமெனவும்  உடனடியாக மாணவர்களின் சீரான கல்விக்கு குறித்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.  குழந்தைகள் நிதியத்தின் நிர்வாக பொறுப்பாளர் கோரியுள்ளார்.

மேலும் உலக அளவில் 1.5 பில்லியன் பிள்ளைகள் தொற்றுநோய் மற்றும் ஊர் முடக்கம்  போன்ற செயற்பாடுகளாலும் பாடசாலைகள் இயங்காமையினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பாவை தவிர ஆபிரிக்கா, ஆசிய நாடுகளே கல்வி செயற்பாடுகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையிலேயே இழந்த கல்வியை ஈடுசெய்ய சம்பந்தப்பட்ட நாடுகள் துரித நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று ஐ.நா. கோரியுள்ளது. 

இலங்கையைப் பொறுத்தமட்டில் கல்வி நடவடிக்கைகள் சீர் அடைந்தாலும் இழந்த கல்வியை ஈடு செய்யக்கூடிய வகையிலும் பரீட்சைகளை துரிதமாக நடாத்தி மாணவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.

இதேவேளை கொரோனாவுக்கு பின்னர் மாணவர்களின் வரவு வீதம் குறைந்துள்ளதுடன் இடைவிலகல் அதிகரித்துள்ளதையும் கல்விச் சமூகம் மறந்து போகக்கூடாது.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22