முககவசம்  அணிவதால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் கொரோனா வைரஸ் பரவலை மற்றவர்களுக்கு பரப்புவதைத் தடுக்கலாம் என்பது உறுதிப்படுத்தப்பட் உண்மை.

எனினும் நாம் எவ்வகையான முககவசங்களை அணிகின்றோம் மற்றும் அவற்றை சுகாதார பரிந்துரைகளுக்கு ஏற்ப அணிகின்றோமா என்பதை பொருத்துதான் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுகின்றது. 

தற்போதைய காலகட்டத்தில் உலகலாவிய ரிதியில் மக்கள் முககவசம் அணியவேண்டும் என உலகசுகாதார ஸ்தாபனம் வலியுருத்தி வருகின்றது. இதற்கமைய பிரதானாக வீட்டில் தாரிக்கப்படும் ஒற்றை அடுக்கு பருத்தி முககவசம் மற்றும் அறுவைசிகிச்சை முககவசம் என இரண்டு விதமான முககவசங்கள் பரித்துரைக்கப்படுகின்றன.

இவை இரண்டினதும் நோய்பரவல் அல்லது நீர்த்துளிகள் காற்றில் தெளிப்படைய செய்யும் தண்மைகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். 

இவ் ஆய்வின் படி இருமும்போது அல்லது பேசும்போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் காற்றில் தெளிக்கப்படுவதை  வீட்டில் தயாரிக்கப்படும் பருத்தி முககவசங்கள்  99.9% வீதம் தடுக்கும் அதேவேளை அறுவை சிகிச்சை முககவசங்கள்  100%  சதவீதம் நீர் துளிகள் தெளிக்கப்படுவதை தடுக்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

முககவசம் இல்லாமல் ஒருவரிடமிருந்து 6 அடி தூரத்தில் நிற்கும் மற்றொருவர், முகமூடி அணிந்த ஒருவரிடமிருந்து 1.5 அடி தூரத்தில் நிற்கும் ஒருவரை விட கொரோனா வைரஸ் நீர்த்துளிகளை சுவாசிக்க 1,000 மடங்கு அதிகம் வாய்ப்பு உள்ளது என விஞ்ஞர்னிகள் எச்சரிக்கின்றனர்.

மேலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒற்றை அடுக்கு பருத்தி முககவசங்கள் கொரோனா தொற்று நீர்த்துளிகள் பரவும் எண்ணிக்கையை 1,000 மடங்காகக் குறைத்துள்ளது. 

பொதுவில் முகத்தை மூடுவதன் மூலம் நீங்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் மற்றவர்களுக்கு நோய்யை பரப்புவதை தவிர்க்கும் அதே வேளை, நீகங்கள் சாதாரணமானவராக இருந்தால் நோய்த் தொற்றுக்கு உள்ளாகுவதிலிருந்து தப்பிக்கமுடியும்.

'சிறிய துளிகளை வடிகட்டுவதில் பல்வேறு பொருட்களில் தயாராகும் முககவசங்கள் வேறுபட்ட அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்  "இருப்பினும், மிகவும் ஆபத்தானது என்று கருதப்படும் அந்த பெரிய நீர்த்துளிகளை கட்டுபடுத்துவதைஎளிமையான கையால் செய்யப்பட்ட ஒற்றை அடுக்கு பருத்தி முககவசங்கள் கூட மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டுபிடித்தோம்." 

அறுவைசிகிச்சை முகமூடி வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடியை விட சற்று பயனுள்ளதாக இருந்தது, ஏனெனில் இது பூஜ்ஜிய துகள்கள் காற்றில் தப்பிக்க அனுமதிக்கிறது.

என்று எடின்பர்க் பல்கலைக்கழக பொறியியல் பள்ளியின் வாசகர் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் இக்னாசியோ மரியா வயோலா கூறினார்.