அமெரிக்காவில் தீர்மானமிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி நடைபெற உள்ள நிலையில், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சி யின் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்கியுள்ள இந்திய பூர்விகம் கொண்ட கமலா ஹாரிஸ், கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்டு டிரம்ப் அஞ்சுவதாகவும் மேலும் அவர் சீன விவகாரத்தை சரியாக கையாளும் திறமை அற்றவர் எனவும்  கூறியுள்ளார்.'

இது குறித்து கமலா ஹாரிஸ், கூறியுள்ளதாவது, 

கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை அச்சுறுத்திவரும் நிலையில் டிரம்ப் அரசு வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளை சரியாக கவனிக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்டு டிரம்ப் அஞ்சுகின்றார்.  மேலும் சீன விவகாரத்தை சரியாக கையாளும் திறமை அற்றவர் டிரம்ப். 

கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் கொடியது. இது குறித்து அடிக்கடி டுவிட்டரில் பதிவிடுவதன் மூலமாக மட்டுமே சரிப்படுத்த முடியாது. கொரோனா வைரஸ் குறித்து டுவீட் இடுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளார் டிரம்ப்' என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் அமெரிக்காவை விட்டுப் போகும் என நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது. அவ்வாறு செய்தால் மட்டுமே கொரோனா வைரஸ் நம்மை விட்டுப் போகாது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனப் பேசிய ஹாரிஸ், அரசு நிர்வாகத்தை நடத்துவது எப்படி எனத் தெரியாதவர் டிரம்ப். அரசியல் என்பது தான் மட்டுமே சம்பந்தப்பட்ட ஓர் துறை என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சாடியுள்ளார் கமலா.

தேர்தல் நெருங்கி வருவதால் டிரம்ப், ஜோ பிடேன், கமலா ஹாரிஸ் ஆகியோர் எதிர்கட்சிகள்மீது தீவிர விமர்சனத்தை முன்வைத்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதேவேளை  ஜனநாயகக் கட்சி சார்பாக துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸூக்கு  அமெரிக்க மக்கள் தங்கள் ஒருமித்த ஆதரவை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.