சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதப் பண்பியல் ஆய்வுத்துறைகளில் முக்கியத்துவம் மிக்க ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுவருவதும் தமிழ்நாட்டின் பிரதானமான ஆய்விதழுமான ‘மணற்கேணி’யின் ”ஆய்வுவெளி - ஆய்வு மாணவர்களுக்கான இணையவழி ஆய்வரங்கம்” இன்று சனிக்கிழமை 29-08-2020 அன்று ஆரம்பிக்கவுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்களும், இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர்களும் கலந்து கொண்டு தமது ஆய்வுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சனின் ஒருங்கிணைப்பில் இடம்பெறும் இந்த ஆய்வரங்கில், அந்தப் பல்கலைக்கழகத்தின் முதுதத்துவமானி ஆய்வாளர்களான வி.விமலாதித்தன், த.அருள்விழி ஆகியோரும் கலாநிதிப்பட்ட ஆய்வாளர்களான ஏ. அனுசாந்தன், த.ஜீவராஜ் ஆகியோரும் தமது ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளனர். தொல்காப்பியம், குறுந்தொகை, கம்பராமாயணம், திருவாசகம், திருப்புகழ் ஆகிய பழந்தமிழ் நூல்கள் தொடர்பான ஆய்வுகள் மட்டுமன்றி, பழந்தமிழரின் போரியல், மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் போன்றனவும் இந்த ஆய்வுரைகளின் பேசுபொருளாக அமைகின்றன.
”ஆய்வுவெளி - ஆய்வு மாணவர்களுக்கான இணையவழி ஆய்வரங்கத்தின்” கருத்தாளர்களாக, இலங்கையின் மூத்த மொழியியல் அறிஞரும் பேராசிரியருமான எம்.ஏ. நுஃமானுடன், பேராசிரியர் வ.மகேஸ்வரன், பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன், பேராசிரியர் சோதிமலர் ரவீந்திரன் மற்றும் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் ஆகியோரும் இந்தியாவின் சிரேஷ்ட ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் பங்கேற்கின்றமை சுட்டிக்காட்டத் தக்கது.
இன்றைய தினம் ஆரம்பமாகும் இந்த ஆய்வரங்கம் எதிர்வரும் 09-09-2020 ஆம் திகதியன்று நிறைவடையும். நாள்தோறும் மாலை 7 மணிக்கு ஆய்வரங்கச் சொற்பொழிவுகள் இணையவழியாக ZOOM மென்பொருள் மூலம் இடம்பெறுமென்பது குறிப்பிடத் தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM