பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­த­ம­ராக தெரேஸா மே இன்று மாலை பத­வி­யேற்­கிறார் .இதன் மூலம் அந்­நாட்டின் இரண்­டா­வது பெண் பிர­தமர் என்ற பெயரை அவர் பெறு­கிறார்.

அவர் நாட்டின் பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான போட்­டியை மேலும் 9 வாரங்­க­ளுக்கு எதிர்­கொள்ள நேரிடும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில், பழை­மை­வாதக் கட்­சியைச் சேர்ந்த அவ­ரது போட்டி வேட்­பா­ள­ரான அன்ட்­றியா லீட்ஸம் திங்­கட்­கி­ழமை அந்தப் போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்­கி­ய­தை­ய­டுத்து அவ­ரது வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அந்­நாட்டின் பதவி விலகிச் செல்லும் பிர­தமர் டேவிட் கமெரோன் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை மகா­ரா­ணி­யா­ரிடம் இன்று கைய­ளிக்­க­வுள்ளார்.

அதே­ச­மயம் 2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து பிரித்­தா­னி­யாவின் உள் துறை செய­லா­ள­ராக பணி­யாற்றி வந்த தெரேஸா மே, அந்தப் பத­வி­யி­லி­ருந்து விலகி பிர­தமர் பத­வி­யை­யேற்று தனது சொந்த அமைச்­ச­ரவைக் குழுவை நிய­மிக்­க­வுள்ளார்.

இந்­நி­லையில் தெரேஸா மே தனது புதிய பதவிப் பொறுப்பு குறித்துத் தெரி­விக்­கையில், அந்தப் பத­வியை பொறுப்­பேற்­பது குறித்து தான் கௌர­வ­ம­டை­வ­தா­கவும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னி­யாவின் வில­கலை வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்ள உறு­தி­ய­ளிப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

இதன்­போது கட்­சி­யையும் நாட்­டையும் திற­மை­யுடன் வழி­ந­டத்­தி­யுள்­ள­தாக டேவிட் கமெ­ரோ­னுக்கு பாராட்டுத் தெரி­வித்த தெரேஸா மே, தலை­மைத்­து­வத்­துக்­கான போட்­டி­யி­லி­ருந்து கண்­ணி­யத்­துடன் வில­கிய அன்ட்­றியா லீட்­ஸ­மிற்கு நன்றி தெரி­வித்தார்.

ஆனால் பிரித்­தா­னிய தொழிற் கட்­சியைச் சேர்ந்த சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜோன் திறிகெட், லிபரல் ஜன­நா­யகக் கட்சி மற்றும் கிறீன் கட்­சி­யுடன் இணைந்து முன்­கூட்­டியே தேர்­த­லொன்றை நடத்­து­வ­தற்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

தொழிற்­கட்­சியின் பொதுத் தேர்தல் ஒருங்­கி­ணைப்­பா­ளரும் அக்­கட்­சியின் தலை­வ­ரான ஜெரேமி கொர்­பைனின் நெருங்­கிய நண்­ப­ரு­மான ஜோன் திறிகெட், ஜன­நா­யக ரீதியில் பிர­தமர் ஒரு­வரை தெரிவு செய்­வது மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மா­னது எனவும் அதனால் பொதுத் தேர்­த­லொன்று நடத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது எனவும் தெரி­வித்தார்.

முன்­கூட்­டியே பொதுத் தேர்­த­லொன்றை நடத்­து­வ­தற்கு விடுக்­கப்­பட்ட கோரிக்­கை­களை தெரேஸா மே நிரா­க­ரித்­துள்ளார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வது தொடர்பில் அந்த ஒன்­றி­யத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­பது மற்றும் குடி­வ­ரவைக் கட்­டுப்­ப­டுத்­து­வது உள்­ள­டங்­க­லான சவால்­களை தெரேஸா மே எதிர்­கொண்­டுள்­ள­தாக அர­சியல் அவ­தா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

தெரேஸா மே 9 வாரங்­க­ளுக்­கான தலை­மைத்­துவ போட்­டி­யி­லி­ருந்து விடு­பட்டு 48 மணி நேர அறி­வித்­த­லை­ய­டுத்து பத­வியைப் பொறுப்­பேற்கும் வாய்ப்பைப் பெற்­றுள்­ளமை அவ­ருக்கு புதிய அமைச்­ச­ரவை குறித்து தீர்­மா­ன­மெ­டுக்க போதிய கால அவ­சா­சத்தை வழங்­கு­வ­தாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் பிரித்­தா­னியா தொடர்ந்­தி­ருப்­ப­தற்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்து வந்த அவ­ருக்கு, அந்த ஒன்­றி­யத்­தி­லி­ருந்து விலக (பிறிக்ஸிட்) ஆத­ர­வ­ளித்­த­வர்­க­ளுக்கு முக்­கிய பதவிப் பொறுப்­பு­களை வழங்க நிர்ப்­பந்தம் கொடுக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் தெரேஸா மே, இன, சமூக மற்றும் பொரு­ளா­தார சீர்­தி­ருத்­த­மொன்றை முன்­னெ­டுக்க உறு­தி­ய­ளித்­துள்ளார். இது தற்­போது உயர் பத­வி­க­ளி­லுள்ள சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­களின் எதிர்­காலம் தொடர்பில் ஊகங்கள் பரவ வழி­வகை செய்­வ­தாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தெரேஸா மேக்கு இறுதி வாக்­கெ­டுப்பின் போது அத­ர­வ­ளித்த அந்­நாட்டு முன்னாள் அதிபர் கென் கிளார்க், புதிய பிர­தமர் தனது அமைச்­ச­ரவை நிய­ம­னங்­களின் போது கட்­சியில் சம­நி­லையைப் பேண வேண்­டி­யுள்­ளது எனக் கூறினார்.

2010 ஆம் ஆண்டில் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற டேவிட் கமெரோன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் பிரித்­தா­னியா தொடர்ந்து இணைந்­தி­ருப்­ப­தற்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்து வந்தார். எனினும் இது தொடர்பில் இடம்­பெற்ற சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் பிரித்­தா­னிய மக்கள் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து அந்­நாடு பிரி­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­தை­ய­டுத்து அவர் பதவி வில­கு­வ­தாக அறி­விப்புச் செய்­தி­ருந்தார்.

டேவிட் கமெரோன் தனது பதவி விலகல் தொடர்­பாக அறி­வித்த பின் கூறு­கையில், தெரேஸா மே எதிர்­வரும் வரு­டங்­களில் பிரித்­தா­னியா எதிர்­கொண்­டுள்ள தேவை­க­ளுக்கு ஏற்­ற­வாறு அந்­நாட்டை வழி­ந­டத்தத் தகு­தி­யு­டைய ஒருவர் என பாராட்டுத் தெரி­வித்தார்.

"அவ­ருக்கு( தெரேஸா மேக்கு) எனது முழு ஆத­ரவும் உள்­ளது" என அவர் கூறினார்.

பிரித்­தா­னிய தலை­மைத்­து­வத்­துக்­கான போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்கிக் கொண்­டமை தொடர்பில் அனட்­றியா லீட்ஸம் கூறு­கையில், பிரித்­தா­னியா எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டி­யான தரு­ணத்தில் தலை­மைத்­து­வத்­துக்­கான போட்­டியை 9 வாரங்கள் நீடிப்பது விரும்பத்தக்கது அல்ல என்பதாலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்ததாகத் தெரிவித்தார். அவர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது பத்திரிகையொன்றுக்கு ஏற்கனவே அளித்த பேட்டியில் தெரேஸா மே பிள்ளைகளற்றவர் என்பதைக் குறிப்பிடும் வகையில் பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கும் தான் உள்துறை செயலாளரை விடவும் பிரதமர் பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் எனக் கூறியிருந்தமை குறித்து அனட்றியா லீட்ஸம் மன்னிப்புக் கோரியுள்ளார்.