டிக்டொக் செயலியின்  பிரதம நிறைவேற்று அதிகாரி  கெவின் மேயர் இராஜிநாமா செய்துள்ளார்.

உலகில மிகவும் பிரசித்தி பெற்ற டிக்டொக் செயலியின் பிரதம நிறைவேற்று அதிகாரி  நியமனம் பெற்று 3 மாத கால இடைவெளியில் கெவின் மேயர் தனது இராஜிநாமாவை அறிவித்துள்ளார்.

சீனாவுடனான தொடர்புகளை துண்டித்துகொள்ளுமாறு ட்ரம்ப் நிர்வாகம் கொடுத்த அழுத்தங்களை அடுத்தே தனது இராஜிநாமாவை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேயர் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் சூழல் மிகவும் கூர்மையாக மாற்றமடைந்துள்ளது. நிறுவனத்திற்கு எவ்வாறான மீள் கட்டமைப்பு வரப்போகின்றது குறித்து அனுமானித்து அதிலிருந்து விலகுவது சிறந்தது என முடிவு எடுத்துள்ளேன்.

"இந்த முடிவுக்கு நிறுவனத்துடனோ, எங்கள் எதிர்காலத்திற்காக நான் காணும் விஷயங்களுடனோ அல்லது நாங்கள் கட்டியெழுப்புவதில் எனக்கு இருக்கும் நம்பிக்கையுடனோ எந்த தொடர்பும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன்"  என மேயர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அரசாஙகத்தி்ன் நிர்வாகம் காரணமாக டிக்டொக் செயலியை உலகளாவிய ரீதியில்  கொண்டு  சொல்வது மிகவும் கடினமானன பணியாக இருக்கும் என நான் கருதுகிறேன் என்றும் அவர் தனது  செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.