நோர்வூட் பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள பொகவந்தலாவ பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் நாளாந்தம் சேரும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால் ஒருசிலர் கழிவுகளை கெசல்கமு ஓயாவில் கொட்டுவதால் சூழல் மாசடைவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமையலறைக் கழிவுகளை அகற்ற புதிய வழிமுறைகள் | Virakesari.lk

பொகவந்தலாவ நகரை ஊடறுத்து காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரை வழங்கும் பிரதான நதியான கெசல்கமு ஓயாவில் கழிவுகளை கொட்டுவதன் மூலம் நகரில் உள்ள ஒரு பகுதியில் தேங்கி துர்மணம் வீசுவதாக நகருக்கு வரும் மக்கள் மற்றும் நாளாந்தம் பாடசாலைக்கு வரும் மாணவர்கள், பாதசாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது விடயமாக நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் குழந்தைவேல் ரவியிடம் கேட்டபோது, எங்களது பிரதேச சபை புதிதாக உருவாக்கப்பட்டது எங்களிடம் 2 உழவு இயந்திரங்கள் மட்டுமே கழிவுகளை அகற்ற உள்ளது. மாகாண சபை அதிகாரிகள் ஊடாக கழிவுகளை அகற்ற பார ஊர்தி கேட்டுள்ளோம்.

கெசல்கமு ஓயாவில் கழிவுகள் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொகவந்தலாவ பொலிசாருடன் இணைந்து விN~டநடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.