இந்தியாவிலிருந்து நாடு திரும்பினர் 35 அகதிகள்

Published By: Robert

13 Jul, 2016 | 09:38 AM
image

இலங்கை தமிழ் அக­திகள் 35 பேர் நேற்று இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு­தி­ரும்­பி­யுள்­ளனர். 16 குடும்­பங்­களைச் சேர்ந்த 35 பேரே தமது சுய விருப்பின் பேரில் நாடு திரும்­பி­யுள்­ளனர். குறித்த அக­தி­க­ளுக்­கான பயண ஏற்­பா­டு­களை ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் மேற்­கொண்­டுள்­ளது. இவர்­களில் 11 ஆண்­களும் 24 பெண்­களும் அடங்­கு­கின்­றனர்.

அவர்­களில் 8 குடும்­பங்­களைச் சேர்ந்த 17 பேர் மது­ரை­யி­லி­ருந்து மிஹின்­லங்கா விமா­ன­ சே­வை­யூ­டாக நேற்று மு.ப. 9.15 மணி­ய­ள­விலும் ஏனைய 8 குடும்­பங்­களைச் சேர்ந்த 18 பேர் சென்­னை­யி­லி­ருந்து மிஹின்­லங்கா விமா­ன­சே­வை­யூ­டாக பகல் 12.05 மணி­ய­ள­விலும் இலங்­கையை வந்­த­டைந்­துள்­ளனர்.

நாடு திரும்­பி­யுள்ள அக­தி­க­ளுக்­கான மீள்­ச­மூக ஒருங்­கி­ணைப்­புக்­கான ஏற்­பா­டு­க­ளையும் ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் மேற்­கொண்­டுள்­ளது. குறித்த அக­திகள் மன்னார், வவு­னியா, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வுள்­ளனர்.

இது தொடர்பில் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் வே.சிவ­ஞா­ன­சோதி தெரி­விக்­கையில், இந்­தி­யா­வி­லுள்ள இலங்கை அக­தி­களை சுய­வி­ருப்பின் பேரில் கட்டம் கட்­ட­மாக நாட்­டுக்கு அழைப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ ளது.

2011 ஆம் ஆண்­டி­லி­ருந்து 4 ஆயி­ரத்து 835 இலங்கை தமிழ் அக­திகள் தமிழ்நாட்­டி­லி­ருந்து நாடு திரும்­பி­யுள்­ளனர். மேலும் இந்­தி­யா­வி­லுள்ள 109 முகாம்­களில் 64 ஆயிரம் இலங்கை அக­திகள் தங்­கி­யுள்­ளனர். அவர்­களில் ஏரா­ள­மானோர் நாடு திரும்­பு­வ­தற்­கான விருப்­பத்தை தெரி­வித்­துள்­ளனர்.

நாடு திரும்பும் அக­தி­க­ளுக்­கான சலு­கை­களை வழங்­கு­வ­தற்கு அமைச்சர் சுவா­மி­நாதன் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்ளார். அதன் பல­னா­கவே அதி­க­ள­வான அக­திகள் நாடு திரும்­பு­வ­தற்­கான விருப்­பத்தை தெரி­வித்­துள்­ளனர். மேலும் நாடு திரும்பும் அக­திகள் தமது வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரு இலட்சம் ரூபா வரை­யி­லான உதவு தொகையும் வழங்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன் அவர்­க­ளுக்கு ஆறு மாத காலத்திற்கு உலர் உணவுப் பொருட் களை வழங்குவதற்கும் அரசாங்கம் நட வடிக்கை எடுத்துள்ளது. மேலும் நிர்மா ணிக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் நாடு திரும்பும் அகதிகளுக்கு வீடு வழங்கு வதற்கான நடவடிக்கையும் மேற்கொள் ளப்படும் எனவும் அவர் மேலும் தெரி வித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02