அமெரிக்காவின் லூசியானாவின் சில பகுதிகளை வியாழக்கிழமை தாக்கிய லாரா புயல் அதிகம் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆறு பேர் உயிரிழக்கவும் காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த ஆறு பேரில் நால்வர் மரம் முறிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

சார்லஸ் ஏரிக்கு மேற்கே 4 மைல் (6.4 கி.மீ) தொலைவில் உள்ள லூசியானாவின் வெஸ்ட்லேக்கில் வியாழக்கிழமை காலை லாரா புயல் தாக்கியதில் ஒரு இரசாயன ஆலை தீப்பிடித் எரிந்தது.

240 கிலோ மீற்றர் வரை காற்று பலத்த சேதத்தை ஏற்படுத்தியது, அரை மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்வெட்டையும் ஏற்படுத்தியது.

டெக்சாஸ் எல்லைக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை லாரா புயல் கரைக்கு வந்தது. பின்னர் வெப்பமண்டல புயலுக்கு தரமிறக்கப்பட்ட லாரா, ஆர்கன்சாஸின் லிட்டில் ராக் நகரிலிருந்து 35 மைல் தெற்கே இருந்தது, இரவு 7 மணி நிலவரப்படி 40 மைல் வேகத்தில் காற்று வீசியது.  அதன் பின்னர் அதிகாலை ஒரு மணியளவில் 150 மைல் வேகத்தில் காற்று வீசியது, 

இதனால் லாரா, தெற்கு லூசியானா சமூகங்களை பேரழிவிற்கு உட்படுத்தியது.

லாரா எதிர்பார்த்ததை விட குறைவான சேதத்தை ஏற்படுத்தியதாகத் தோன்றியதாக கூறப்பட்டாலும், இது ஒரு ஆபத்தான புயலாகவே இருப்பதாக அதிகாரிகள் கூறினர். அத்துடன் அதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர்.