அமெரிக்காவின் வளைகுடா கடற்கரை பகுதியை தாக்கிய லோறா சூறாவளி  பலத்த காற்று மற்றும் பலத்த மழை வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று வியாழக்கிழமை அதிகாலை  சூறாவளியாக உறுவெடுத்த புயல் நிலச்சரிவை ஏற்படுத்தியதுடன்  அமெரிக்காவை  தாக்கிய மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக லோறா சூறாவளி  பதிவாகியுள்ளது. 

இது  மணிக்கு 150 மைல் வேகத்தில் தாக்கியுள்ளதுடன். இதுவரை வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.